Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

நேற்று (12) நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முதற்கட்ட பணி இம்மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

25 ஆம் திகதி இடம்பெறும் நத்தார் தினத்தன்று இந்தப்பணி இடம்பெறாது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் தலைமை அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தும் நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும்.

5 பரீட்சை முறைகேடுகள் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் இவை தொடர்பபில் பரீட்சைத் திணைக்களமும் பொலிசாரும் தனித்தனியே விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology