கொலம்பியாவில் குடிபோதையில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் உடலுறவில் ஈடுபட்ட 32 வயது பெண் பரிதாபமாக மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

கொலம்பியாவின் தெற்கு கலி பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் லா ஃபியரா என்ற 32 வயதுடைய பெண், தனது துணையுடன் குடி போதையில், ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக உறவில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ச்சியாக உறவில் ஈடுபட்டதால், அந்த பெண் திடீரென்று மயக்கமடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் துணைவர் அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார்.

ஆனால், அவசர உதவி கிடைக்க தாமதம் ஆனதால், அவரே அருகில் உள்ள வைத்தியசாலைக்கு குறித் பெண் போர்வையால் சுற்றி வேறொரு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.