Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]


இந்த வாரம் மீனம் ராசியில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய், மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு,சனி, கேது சஞ்சரிக்கின்றனர். கும்ப ராசியில் புதன், சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மீனம், மேஷம், ரிஷபம்,மிதுனம் ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

மேஷம்: 
சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை என்றாலும் வார இறுதியில் மன நிம்மதியை தரும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்கள் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பவை எல்லாம் நடக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு நகைகள் வாங்கி கொடுப்பீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சிறு தூர பயணம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் தான தர்மங்கள் செய்வது நன்மையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். பெண்களுக்கு வீட்டிலும் பணியிடத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இந்த வாரம் காமாட்சி அம்மனை நினைத்து வீட்டில் விளக்கேற்ற நன்மைகள் அதிகம் நடைபெறும். 
ரிஷபம்

ரிஷபம் சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இருந்தாலும் வார மத்தியில் மன சஞ்சலத்தை ஏற்படுத்துவார். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று பணம் கிடைக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் சிறப்பு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத லாபம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகனங்களை கையாளும் பொழுது எச்சரிக்கையாக இருக்கவும். மாணவர்கள் கவனமாக படித்து தேர்வு எழுதவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். பெண்கள் சோம்பலை நீக்கி உற்சாகமாக இருங்கள். நல்லவை அதிகம் நடைபெற வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்கி வரலாம்.

மிதுனம்


 மிதுனம் சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கிறார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் நண்பர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தியில் சலனம் ஏற்படும் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். மாணவர்கள் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு படிப்பில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு அலுவலகத்தில் புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கூட்டுத்தொழில் சிறப்படையும். பெருமாளை வணங்க மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்:



கடகம்: சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழில் சிறப்படையும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக நிலையில் உள்ளதால் கொடுத்த கடன்கள் திரும்ப வரும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் வருமானம் ஏற்படும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பங்கு வர்த்தகத்தில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் கவலை உண்டாகும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் சச்சரவு ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சீரடையும். மாணவர்களுக்கும், பெண்களுக்கும் மகிழ்ச்சிகரமான வாரம் இது. பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்



சிம்மம் சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை என்பதால் கவனம் தேவை. வீண் பேச்சுக்களை தவிர்த்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மன சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரித்து வருமானம் பெருகும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பணிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். மாரியம்மனை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி



கன்னி சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்துடன் தொழில் ஒப்பந்தம் செய்வீர்கள். சந்திரன் சஞ்சாரத்தினால் வார மத்தியில் மனதில் கவலை குடியேறும் கவனம் தேவை. செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வுடன் இடம் மாற்றம் உண்டாகும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினையை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். பெண்கள், மாணவர்களுக்கு நன்மை தரும் வாரம். மேலும் நன்மைகள் நடைபெற திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வழிபடலாம்.

துலாம்



துலாம் சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். சந்திரன் சஞ்சாரத்தினால் வார இறுதியில் சந்திராஷ்டமம் உள்ளது வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வரவு சிறப்பாக இருக்கும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பழங்கலைகளை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக வீட்டை பராமரிப்பீர்கள். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள். குல தெய்வத்தை கும்பிட்டு வரலாம்.

விருச்சிகம்



விருச்சிகம் சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக விற்க நினைத்திருந்த வீடு விற்கும் காலம் இது. புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகன விபத்துகள் உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சைத் தவிர்க்கவும். யாரிடமும் வீண் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். பெண்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த வாரம் உற்சாகமான வாரமாக உள்ளது. செவ்வாய்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும்.

தனுசு



தனுசு சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு வாகன யோகம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் இயந்திரங்களை இயக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நல்ல தகவல் கிடைக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குழந்தைகளினால் பெருமை அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நிம்மதி உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மந்த நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு இந்த வாரம் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். மேலும் நன்மைகள் நடைபெற லட்சுமி தேவியை வணங்கலாம்.

மகரம்



மகரம் சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு தொழில் உத்தியோகத்தில் நல்ல செய்தி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தினால் மனதில் அமைதி குடியேறும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல்களை தவிர்க்கவும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும். மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம். பெண்கள் நினைத்தது நிறைவேறும் என்பதால் அன்னை காமாட்சியை வணங்கலாம்.

கும்பம்



கும்பம் சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் மனதில் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவிற்கு மருந்து மாத்திரை வாங்க வேண்டியிருக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதி நுட்பம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் பொலிவு கூடும். சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நினைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரம் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வீர்கள். பெண்களுக்கு இந்த வாரம் லாபமான வாரம். புதன்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வரலாம்.

மீனம்



மீனம் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை என்றாலும் வார இறுதியில் மனதில் அமைதியை ஏற்படுத்துவார். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறந்த நிலையை அடையும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவினங்களைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் வெற்றி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள் பெண்களுக்கு இந்த வாரம் லாபமான வாரம் என்பதால் உற்சாகம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை காலை மாலை வீடுகளில் விளக்கேற்றுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.


Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology