Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

பயங்கரவாதி சஹ்ரான் தலைமையிலான குழுவினரில் சிலர் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டு வளவிற்குள் மர்மநபர்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் - வனாத்தவில்லு பகுதியிலுள்ள லெக்மோடா தோட்டத்தை குற்ற விசாரணை பிரிவினரும் அரச பகுப்பாய்வினரும் நேற்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி லெக்டோ தோட்டத்தில் இருந்து பாரியளவு வெடிபொருட்கள் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டன.

மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது அவர்களுக்கும் இந்த லெக்டோ தோட்டத்திற்கும் தொடர்பு என தகவல் வெளியாகியது.

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவில் உள்ள லெக்டோ தோட்டத்தினுள் சஹ்ரான் குழுவினர் இராணுவ பயற்சி பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிக்குள் நுழைவதற்கு உரிமையாளருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 24ஆம் திகதி இந்த தோட்டத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நுழைந்ததாக பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த தோட்டத்தில் சில அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டிற்கு கீழே இருந்த கொன்க்ரீட் உடைக்கப்பட்டு சில அடி தூரம் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்து. அதற்கமைய வனாத்தவில்லு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துளளனர்.

அகழ்வு நடவடிக்கையின் போது ஏதாவது பொருள் கொண்டு செல்லப்பட்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான பாதுகாப்பு அச்சறுத்தல் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology