Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கை அகதிகளின் தஞ்சக் கோரிக்கை பரிசீலனையில் திடீர் திருப்பமாக நீதிமன்றின் தீர்ப்பு ஒன்று அமைந்துள்ளது.

அந்த வகையில், RS எனப்படுகின்ற இலங்கையரின் மேன்முறையீடு ஒன்று கடந்த 15ம் திகதி பிரித்தானியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் (Court of Appeal) எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை ஆராய்ந்த மூன்று நீதிபதிகள்,

இலங்கையில் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்த ஒருவர் 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் அவர் லஞ்சம் கொடுத்து தடுப்பிலிருந்து தப்பியிருந்தால், அவரை இங்கிலாந்து திருப்பி இலங்கைக்கு அனுப்பினால் அங்கு அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் துன்புறுத்தப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அவருக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் தீர்பளித்து உள்நாட்டு திணைக்களத்திற்கு ஒரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாது 2009 யுத்தத்தின் பின்னர் தடுப்பில் இருந்து விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தப்பி இருந்தால் அவருக்கு ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

இந்தத் தீர்ப்பு இலங்கைத் தமிழ் அகதிகளுடைய வழக்குகளைக் கையாளும் அணுகுமுறையில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருமென்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology