Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



அரச ஊழியர்களுக்கு உரிய வேதனம் உட்பட மேலும் பல வசதிகளைப் பெற்றுக்கொடுத்து சக்திமிக்க அரச சேவையைக் கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்லயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான், 20 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்றியதுடன், 10 ஆண்டுகள் செயலாளராகவும் பணியாற்றியதாகவும், இதனூடாக அரச துறை செயற்படும் விதம் குறித்து தனக்கு புரிந்துணர்வு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர், அரசியல் தலையீடுகளை குறைத்து, அரச ஊழியர்களுக்கு தீர்மானம் மேற்கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

இதனூடாக நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இன்றைய தினம் அரச ஊழியர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படுத்தபட்டு, அவர்கள் காவல்துறை நிதி மோசடி விசாரணைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அரச சேவை செயழிலக்கச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கு சட்டத்தின்மூலம் பாதுகாப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் தாம் மேற்கொள்ள உள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தங்களது ஆட்சியில் புதிய வரி முறைமையை கொண்டுவர உள்ளதாகவும், பெறுமதிசேர் வரியை 100க்கு 8 வீதம் வரையில் குறைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து துறையுடன் சார்ந்தவர்கள் குறித்தும் தங்களது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology