Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]

மாத்தறையில் இருந்து கொட்டாவ மற்றும் கடுவெல பேருந்தில் பயணிகள் குவிந்திருந்த நிலையில் ஒரு வெளிநாட்டு பயணி பேருந்தில் ஏறியமையினால் ஏனைய பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

நெடுஞ்சாலையில் பயணிகள் இறங்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் இதனால் பேருந்திற்கு ஏறுமாறு நடத்துன்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாத்திக்கப்பட்ட சீன நாட்டவர் பேருந்தில் இருந்தால், ஒன்றரை மணி நேரத்திற்குள் தங்கள் உடலிலும் தொற்றும் ஆபத்து உள்ளமையினால் தாம் ஏற முடியாதென பயணிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலைமையின் போது தான் பேருந்தை விட்டு வெளியேற முடியாதென கூறி சீன நாட்டவர் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த நெடுஞ்சாலையில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வேறு பேருந்துகளில் பயணிகள் ஏறிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவமானது, திரைப்படம் ஒன்றில் வடிவேலு நடத்துனராக பணியாற்றிய பஸ்ஸில் பாம்பாட்டி ஏறியதை தொடர்ந்து மக்கள் சிதறிஓடிய காட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology