Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



யாழ் வடமராட்சியின் ஒரேயொரு தேசிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை காலமும் இப் பாடசாலையில் பதில் அதிபராக கடமையாற்றிய திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களே இப் பாடசாலைக்கு தற்போது நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்களை நியமிப்பதற்காக நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் தெரிவானதன் மூலம் 25.02.2020 அன்று கல்வி அமைச்சில் வைத்து இவ் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் 2021 இல் நெல்லியடி மத்திய கல்லூரி நூற்றாண்டு விழாவை காணவுள்ள நிலையில், அப் பாடசாலையின் பழைய மாணவரும், கல்லூரியை கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்பவருமான திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் இப் பாடசாலைக்கு நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையானது கல்லூரிக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்துள்ளதாக நலன்விரும்பிகள் வரவேற்றுள்ளார்கள்.

மேலும் சாவச்சேரி இந்துக் கல்லூரி அதிபராக திரு.சர்வேஸ்வரனும், யாழ்ப்பாண இந்துக்கல்லூரி அதிபராக திரு.செந்தில்மாறனும் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology