Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]



கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ள பெயர்களை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது.

இதை சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி குழுவில் இரண்டு சிறுபான்மையினரை இணைத்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று குறித்த இரண்டு பேரின் பெயர்களை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology